Friday 10 February 2012

கருத்து கோமாளி


  • போஸ்டர்களிலும், கட்-அவுட்களிலும், விளம்பரங்களிலும் எல்லா தலைவர்களும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள் . இவர்கள் சிரிக்கிற அளவுக்கு அப்படியென்ன சாதனை படைத்தது விட்டார்கள். நம் நாட்டில் சிரிப்பாய் சிரிப்பது ‘ஜனநாயகம் தானே’.

  • இனிமேல், தினமும் 8 மணி நேரம் பவர்கட்டாம். யாரங்கே சிம்னி விளக்கையும், விசிறியையும் எடுத்து வையுங்கஅப்படியே, வீட்டுவாசலில் கயிற்றுக் கட்டிலை வாங்கி போடுங்க. பேசிக்கொண்டே பொழுதை கழிக்கலாம். 40 - 50 வருடம் பின்னோக்கி போகப்போகிறது நாடு. வாழ்க...கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்பாளர்கள்.... வளர்க அவர்களது சேவை.

  • இந்த நாட்டில் எல்லாமே தலை கீழாக நடக்குது. கல்வி, மருத்துவத்தை தனியார் கையில் கொடுத்துவிட்டு, கைகட்டி வேடிக்கை பறக்குது அரசு. ஆனால், டாஸ்மாக்கை மட்டும் இவங்க வெச்சுகிடுவாங்கலாம். படி..படினு சொல்கிற காலம்போய், குடி...குடினு சொல்லக்கூடிய அவலநிலை வந்துடுச்சு.

  • இனி, குழந்தைகளிடம் ‘நீ, IAS ஆகணும்’ என பெற்றோர்கள் டார்ச்சர் பன்னமட்டங்க. தமிழகத்தில IAS அதிகாரிகள் என்னென்ன பாடுபடுராங்க... எத்தனை தடவை மாற்றப்படுரங்கன்னு அவங்க நல்லாவே உணர்ந்திட்டாங்க..! ஆனால், அரசியல்வாதி ஆகனும்னு மிரட்ட சான்ஸ் இருக்கு.

  • இலவச அரிசி கொடுத்தார்கள...சிரித்துக்கொண்டே வாங்கினோம். இலவச மின்விசிறி தந்தார்கள்... மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டோம். அடுத்த தேர்தல் அறிக்கையில், தினமும் இலவசமாக 4 பீர் பாட்டில் வழங்கப்படும் என்று யாராவது சொல்லப் போகிறார்கள். அதை நாம் கைதட்டி வரவேற்கத்தான் போகிறோம். அவர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்கத்தான் போகிறோம். இலவசங்களுக்கு ஆசைப்பட்டே ‘இளைத்துக்கொண்டு’ போகிறாய் தமிழா!