Wednesday 8 February 2012

வியாபாரமாகும் மருந்து துறைகள்

பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட உயிர் காக்கும் பல மருந்துகள் இந்தியாவில் தாராளமாக விற்பனையில் உள்ளன.

இன்றைய தேதியில் இந்தியர்களை பரவலாக தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த 360க்கும் குறைவான மருந்துகளே போதுமானவை. ஆனால், நம் நாட்டில் சுமார் 7,௦௦௦௦ மருந்துகள் கடைகளில் கனஜோராக விற்பனையாகி கொண்டிருக்கின்றன.

அதிக லாபம் கிடைக்கும் பல வர்த்தக துறைகளில் மருந்து விற்பனையும் ஒன்று. இந்தியாவில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 8,௦௦௦ கோடி அளவுக்கு பணம் புழங்குகிறது. மருந்து தயாரிப்பில் உலகிலுள்ள ஆறு மிக பெரிய நாடுகளின் வரிசையில், ஆசியாவில் இந்தியாவும் ஜப்பானும் உள்ளன. மிக பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறுவதால் தடை செய்யப்பட்ட மருந்துகளை இங்கு கட்டுபடுத்த முடியவில்லையா? 

இந்தியாவில் சுகாதாரத்துறையின்கீழ் மருத்துவமனைகளும் டாக்டர்களும் மருத்துவ ஊழியர்களும் வருகிறார்கள். ஆனால், டாக்டர்கள் நோய்களை தீர்க்க எழுதித்தரும் மருந்துகள் அனைத்தும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்ச்சகதின்கீழ் வருகின்றன. இது மருந்துத்துரையில் இருக்கும் மிக முக்கியக் கோளறு. உயிர் காக்கும் மருந்துகள் எப்படி ரசாயன, உரத்துறையின்கீல் வர முடியும்? முதலில் இதை சுகதாரத்துரையினகீழ் கொண்டு வர வேண்டும்.

நோய்களை கட்டுபடுத்தப் போதுமான 360 மருந்துகள் தவிர, combination என்ற பெயரில் (2 வேதிப்பொருள்களை இணைத்து) மாநில மருந்துத்துறை கட்டுப்பட்டு ஆணையத்தின் அனுமதியுடன் பலவகையான மருந்துகள் தாயரிக்கபடுகின்றன. “இந்த combination மருந்து தயாரிக்க போகிறேன்” என்று ஒரு லெட்டர் கொடுத்துவிட்டால் போதும், உடனே அனுமதி கிடைத்துவிடும்.

பயன்பாட்டிற்குப் பிறகு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு , பாதிக்கப்பட்டவர் சட்டரீதியில் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே அரசு விழித்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த மருந்தை தடை செய்யும். அதிலும் விற்பனையாளர்கள் நீதிமன்றத்தில் அதற்கு தடை பெறுவார்கள்.

கடுமையான சட்டங்கள் இருப்பதால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட இத்தகைய மருந்துகளை விற்க முடியாது.

நம் நாட்டு மருந்து கம்பெனிகள் தவிர, பன்னாட்டு கம்பெனிகளும் அவர்கள் நாட்டில் விற்பனை செய்ய முடியாத மருந்துகளை இங்குதான் விற்கின்றன.

இந்திய மருந்து விற்பனைப் பிரதிநிதிககள் கூட்டமைப்பு எடுத்த ஒரு சர்வேயில், இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 10 மருந்துகளில் தேவையற்ற கலவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்த மருந்துகளின் விற்பனை மட்டும் ஆண்டிற்கு 202 கோடி ருபாய்.

தடை செய்யப்பட்ட மருந்துகளை டாக்டர்கள் எழுதித் தருவதர்க்கு என்ன காரணம்? தொழில் துறையை ஊக்குவிப்பது ரசாயன மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பு. வர்த்தக வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதால் அவசியமான மருந்துகள் எவை, அவசியமற்ற மருந்துகள் எவை என்பதை இத்துறை வேறுபடுத்திப் பார்ப்பதே கிடையாது. டாக்டர்களும் குறிப்பிட்ட கால இடைவேளையில் மருந்துகள் பற்றி “அப்டேட்” செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒரு முக்கிய கரணம்.

ஆர்வமுள்ள டாக்டர்கள் சர்வதேச, தேசிய அளவில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு தங்களை புதுப்பித்துக் கொல்கிரார்கள். அப்படி முயற்சி மேற்கொள்ளாத டாக்டர்கள், மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் மூலம்தான் புதிய மருந்துகளை பற்றி தெரிந்துகொல்கின்றனர். வளர்ந்த நாடுகளில் டாக்டோர்களுக்கென கட்டாய தொடர்கல்வி முறை உள்ளது. ஆனால், இந்தியாவில் அவ்வகை ஏற்பாடுகள் இல்லை.

ஒரு மருந்தை பற்றிய முழு விவரங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிநாடுகளில் அரசே வெளியிடுகிறது. இந்த புத்தகங்களில் மருந்து கம்பெனிகளின் விளம்பரங்களை அனுமதிப்பது இல்லை. இந்த முறைக்கு தேசிய மருந்து விதிமுறைகள் என்று பெயர். இந்தியாவில் மருந்து கம்பெனிகளே தயாரித்து வெளியிடுகின்ற புத்தகங்கள் அதன் விளம்பரத்தோடு இருக்கின்றன. இவை முழுக்க வர்த்தக நோக்கம் கொண்டவை என்பதால், தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய தகவல்கள் முழுமையாக டாக்டர்களுக்குக் கிடைப்பதில்லை.

எது எப்படியோ, வர்த்தகம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்படுவதால் போலியான, காலவதியான, தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு வந்து, அப்பாவி பொதுஜனத்தின் உயிரோடு விளையாடுவது தொடர்கதையாக்கிக் கொண்டிருக்கிறது.